உற்சாகமாக கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு!

உற்சாகமாக கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு!

 கு.அசோக்,

 குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு  கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடல்களுடன் ஊர்வலம் சென்றனர்.

 இந்நிலையில்  இராணிப்பேட்டையில்  2 தேவாலயங்கள் இணைந்து 1000 கிறிஸ்தவர்கள் பங்கேற்று குறுந்தோலை கைகளில் ஏந்தியபடி ஊர்வல பவனி வந்தனர்.

  நேற்று குருத்தோலை ஞாயிறு நிகழ்வு அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்றது இதில் குருத்தோலை நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் நகரின் வீதிகளின் வழியாக இயேசுவை ஊர்வலமாக அழைத்து வந்தபோது கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

  அதை நினைவு கூறும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்திலிருந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ தூய மரியாள் ஆகிய 2 தேவாலயங்களுக்கு உட்பட்ட திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி இயேசுவின்  பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

 புனித ஆரோக்ய அன்னை ஆலய பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில் சி.எஸ்.ஐ தேவாலயத்திலிருந்து   1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குழந்தை இயேசு ஆலயத்திலிருந்து எம்.பிடி.சாலையிலிருந்து ரோடு, நவல்பூர் கெல்லிஸ் ரோடு, பஜார் காந்தி ரோடு ஆகிய சாலைகளின் வழியாக சென்றனர்..

  சோளிங்கர்   குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகளில் வழியாக கையில் குருத்தோலை வைத்துக்கொண்டு  ஊர்வலமாக சென்று சிஎஸ்ஐ தேவாலயம சிறப்பு வழிபாடு செய்தனர்.

  சோளிங்கர் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி ரோடு, போஸ்ட் ஆபிஸ் தெரு, சித்தூர் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.இதில் ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

  வேலூர் மாவட்டம், வேலூர் சி. எஸ்.ஐ. மற்றும் ரங்காபுரம் கிறிஸ்து நாதர் ஆலயத்தில்குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.