ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நோ யூஸ்! சாலைமறியல் செய்யப் போவதாக மிரட்டல்!

ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நோ யூஸ்! சாலைமறியல் செய்யப் போவதாக மிரட்டல்!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூரில் இருந்து மூக்கனூர் ஊராட்சி அடுத்து தாயப்பன் வட்டம் பகுதியில் உள்ள சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன இந்த நிலையில் தனி நபர் இரண்டு நபர்கள் சாலையில் பள்ளம் தோண்டி அந்த வழியாக பொதுமக்கள் போக முடியாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் மனு அளித்தனர்.

   இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் திருப்பத்தூர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கையாக ரோடு வசதி மற்றும் ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

  அதில் தெரிவித்திருப்பதாவது, 75 குடும்பங்கள் தாயப்பன் வட்டப் பகுதியில் வாழ்ந்து வருகின்றோம்.

    எனவே அவ்வழியாகத்தான் பள்ளி மாணவர் மற்றும் நோயாளிகள் திருப்பத்தூர் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவழியாத்தான் செல்ல வேண்டும்.

  நாங்கள் அந்த ரோடை 35 ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்தோம், தமிழக முதல்வரும் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதில் கேட்டுக் கொண்டனர்.

 அதை வாசித்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ரோடு கள ஆய்வு செய்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் பின்பு அங்கிருந்து பொதுமக்கள் எங்களுக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால் நாங்கள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என பேட்டி அளித்தனர்.