அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்த ஆம்பூர் எம்.எல்.ஏ.அலுவலகம்!
ஜி.கே.சேகரன்
ஆம்பூரில் 85 லட்சம் மதிப்பில் கஸ்பா மந்தை வெளியில் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஆம்பூர் கஸ்பா மந்தை வெளி பகுதியில் புதியதாக ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டி முடிகக்பப்ட்டது.

அதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. கட்டிடத்தை அமைச்சர் எ,வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார். இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நெடுஞ்சாலை மற்றும் பாலங்களை ஆய்வு செய்தார்.

admin
