மோப்ப ஜீவனுக்கு இறுதி மரியாதை செய்த காவல் துறை!
கு.அசோக்,
காவல் துறையில் பணி செய்த மோப்ப நாய் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்
வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.

இதற்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர்.
உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வருகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

admin
