கனிமொழியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

கனிமொழியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

நரேஷ்.என்,

  2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று ஏக்கத்தில் இருந்தது. இந்த சூழலில் கனிமொழியின் சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும்  திமுக எம்.பி கனிமொழிடெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதில் இரண்டு விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*ஆட்சியில் பங்கு தொடர்பாக மீண்டும் மீண்டும் பேசி வரும் காங்கிரஸ் தலைவர்களால் ஏற்படும் கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

*தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்டமாக சில முடிவுகளை எடுப்பது.

*ஆட்சியில் பங்கு, சீட் பேரம் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும்.

*தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு போதிய களப் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில் திமுக தரப்பில் இருந்தும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. *அதன்படி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்ட தொகுதிகளில் திமுக கை வைக்காது.

 மேலும் இணக்கமான போக்கை உறுதிசெய்ய கட்சி தலைமை மூலம் திமுகவிற்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

  எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ தொகுதி பட்டியல் வெளியான பின்னரே, திமுக அளித்த வாக்குறுதி உண்மையா, இல்லையா என்று தெரிய வரும். இந்நிலையில் ராகுல் காந்தி உடன் கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் கழித்து முடிவடைந்தது. இதில் சீட் பேரம் தொடர்பாக சில கணக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.