ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதியில் முகமூடி கொள்ளையர்கள்!

கு.அசோக்,
ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மாஸ்க் அணிந்த நான்கு பேர் கொள்ளை சம்பவத்தை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி அடுத்த பார்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்த பழனி ஆச்சாரி இவருடைய மகன் கார்த்திக் (26) இவர் ஆந்திர மற்றும் தமிழக எல்லை பகுதியான பார்டர் வட்டப்பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரிடம் வைக்கும் நகைகளை அங்கிருந்து திருப்பத்தூருக்கு கொண்டுவந்து நகைகளை அடகு வைத்து செல்வது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு வழக்கம்போல கார்த்திக் திருப்பத்தூருக்கு நகைகளை அடகு வைக்க வரும்பொழுது, அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பார்டர் வட்டம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார்த்திக் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நான்குபேர் மாஸ்க் அனிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்தனர்.
இதுகுறித்து கார்த்திக் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாஸ்க் அணிந்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.