மருத்துவமனையில் மன்சூர் அலிகான்! பிரச்சாரத்தின் போது உடல் நலம் பாதிப்பு!
கு.அசோக்,
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு சேகரித்து வந்தார். அப்படி தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு குடியாத்தம் பகுதிக்கு வரும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
உடனடியாக அவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் (பாலாறு) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

admin
