பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இந்த நாட்டில் வஞ்சிக்கிறார்கள்! நாகபட்டினம் பிரச்சாரம்!

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இந்த நாட்டில் வஞ்சிக்கிறார்கள்! நாகபட்டினம் பிரச்சாரம்!

க.பாலகுரு,

  பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இந்த நாட்டில் வஞ்சிக்கிறார்கள் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ரபிக் நன்னிலத்தில் பேசினார்.

   நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து இந்தியா கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இதில் சிறப்புரையாளராக மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளராக ரபீக் என்பவர் கலந்து கொண்டும் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் சன்னாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சார மேற்கொண்டா£.¢

 அப்போது பேசிய அவர் அண்ணாமலை போன்றவர்கள் இங்கே சொல்கிறார்கள் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சியைப் பிடித்தால் ஊழல் இல்லாத ஆட்சியாக உருவாக்குவோம் என்று.  லஞ்சம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று சொல்கிறார். லஞ்சத்தின் மிகப்பெரிய யுனிவர்சிட்டியாக நரேந்திர மோடி இருக்கிறா£.¢ அமலாக்கத் துறையை வைத்துக்கொண்டு ஒரு பெரிய நிறுவனங்களின் மூலம் ரைட் அடிக்கிறது, எப்படி ஒரு தாதா ஒரு ரவுடி இருந்துகிட்டு ஒரு பெரிய பணக்காரன் கிட்ட காசு வாங்கிட்டு சொல்லுவானோ அது மாதிரி முதலில் அமலாக்கத் துறையை வைத்து ஏவுகிறது. இப்படி ரைடு பண்ணுன அடுத்த பத்து நாளுக்குள்ள பாஜகவுக்கு 500 கோடி ஆயிரம் கோடி பணம் லஞ்சமாக வழங்கினார்கள்.

 இந்த நாட்டில் எல்லா மதத்தில் உள்ள சட்டங்களை தூக்கிவிட்டு இந்த நாட்டின் பொது சிவில் சட்டத்தை சொல்கிறார்கள். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் செய்த சாதனை என்று சொல்லக்கூடிய செய்தி என்றால் நாங்கள் ராமர் கோவிலை கட்டி விட்டோம் என்று பேசுகிறார்.¢ கோவிலை கட்டுவதற்கு ஒரு பிரதமர் தேவையா என்று மக்கள் எல்லாம் பேசுகிறார்கள்.

 இந்த நாட்டில் யார் யாருக்கு வழிபாட்டுத்தலங்கள் தேவை என்றால் இந்த சமுதாயமே செய்து கொள்ளும் கிறிஸ்துவ சபை அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் கட்டுவார்கள். இவ்வளவு பெரிய நாட்டில் பிரதமராக இருந்து கொண்டு நான் தான் ராமர் கோவிலை கட்டினேன் என்று ஒரு பூசாரி செய்ய வேண்டிய வேலையை பிரதமர் செய்து உள்ளார் சாதனையாக பேசுகிறார்கள்.

  இந்த நாட்டின் மூணு சதவீதம் இருக்கக்கூடிய உயர் ஜாதி வகுப்பினருக்கு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையான இந்துக்களாக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இந்த நாட்டில் வஞ்சிக்கிறார்கள். இந்த நாட்டின் வேலை இல்லாமல் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் ரோட்டில் இருக்கிறார்கள்.

 படித்தவர்களுக்கு வேலை என்று கேட்டால் ஏதாவது டீக்கடையிலோ பக்கோடாவையோ ஏதாவது போடு என சொல்ல கூடிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். மேலும் பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.28 க்கும் மேற்பட்ட பொது நிறுவனங்களை அம்பானிக்கு, அதானிக்கும் தாரை பார்த்து கொடுத்தது தான் பிரதமர் நரேந்திர மோடி.

 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தான் அமைதியான ஆட்சி நடக்கிறது.. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் மன அமைதி இருக்கின்றதா என பேசினார்.

 இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொத்து புதின், மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நன்னிலம் அசா£,¢ திமுக நகர செயலாளர் பக்கிரிச்சாமி, தளபதி ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.