ஆயுள் தண்டனை கைதி தனி அறையில் அடைத்து கொடுமை... வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
கு.அசோக்,
மனித சுதந்திரம் பாதிக்கபடுவதாகவும் வழக்கறிஞரை கூட சந்திக்க விடாமல் தடுப்பதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
வேலூர்மாவட்டம், வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் சென்னையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரை கொடுமைப்படுத்துவதாக வழக்கறிஞர் சிவா என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது வழக்கறிஞர் சிவா தெரிவிக்கையில், சிறையில் உள்ள ஆயுள்தண்டணை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நாகேந்திரனை சந்திக்க மனு செய்து விட்டு பிற்பகல் முதல் நான் காத்திருந்தேன். ஆனால் தாமதமாகவே அவரை அழைத்து வந்தனர்.
தன்னை சிறை அதிகாரிகள் கொடுமைபடுத்துவதாகவும், தனக்கு சரியாக உணவு அளிக்கவில்லை, மருத்து வசதிகள் இல்லை என கூறியதால் சிறை அதிகாரிகள் ஆத்திரத்தில் நாகேந்திரனை தனி சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி தாக்குவதாகவும் அவரின் உயிருக்கு சிறை ஜெயிலரால் ஆபத்து இருப்பதாகவும் சொன்னார்.
மேலும் அவருக்கு நடந்த கொடுமைகளை அவர் முழுமையாக சொல்வதற்குள் நாகேந்திரனை மிரட்டி அழைத்து சென்றுவிட்டனர்.
வழக்கறிஞர் என்ற முறையில் அவரிடம் தகவல்களை சேகரிக்க வந்தேன் அதற்கு சிறை அலுவலர்கள் இடமளிக்கவில்லை.
நாகேந்திரனுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடக்கிறது. இது வெளி உலகிற்கு தெரிய கூடாது என சிறை அதிகாரிகள் இது போன்ற செயல்படுகிறார்கள்.

இதுகுறித்து நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்
வேலூர் சிறையில் சிறைக்கைதிகளை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவது தற்போது வழக்கறிஞர் மூலம் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அந்த சிறையில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு சகல சம்பத்தும் செய்து கொடுக்கிறாராம்.

admin
