வாகனங்கள் சூழ பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு! அண்ணாதுரைக்கு வாக்கு சேகரிப்பு!
ஜி.கே.சேகரன்,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலை நகரில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வாகன பிரச்சாரம் செய்தார். அதே போல் அதே தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் நகர் பகுதியில் நகர செயலாளர் எஸ். ஆர், ராஜேந்திரன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்றதுஸ்.
இன்று மாலை தேர்தர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்றத்துகுடப்பட்ட திருவண்ணாமலை நகரில் அமைச்சர் எ.வ.வேலு வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நகர் முழுக்க அணிவகுத்து வந்தது.
அப்போது திமுக வேட்பாளர் சி,என்,அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வையுங்கள் என்று வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

அதே போல் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகர் பகுதியில் உள்ள கோட்டை தெரு, சின்னகடை தெரு உள்ளிட்ட பத்திர்க்கும் மேற்ப்பட்ட முக்கிய தெருவழியாக சென்று திமுகவினர் தோழமைகட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தனர் பின்னர் பிரதான சாலை வழியாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி சென்று மீண்டு ரயில் நிலையம் வரையில் தீவிர வாக்கு சேகரித்தனர்.
நகர செயலாளர் எஸ்,ஆர் ராஜேந்திரன் மற்றும் சட்டனர்ற உறுப்பினர் நல்லதம்பி திமுகவின் திட்டங்களை கூறியும் இதுவரைக்கும் நம் கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் வாக்கு சேகரித்து ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நன்றியுரை கூறினார்கள்.

admin
