மஹாவீரர் ஜெயந்தி கோலாகலம்! தடையை மீறி இறைச்சி விற்றவர்கள் மீது நடவடிக்கை!

மஹாவீரர் ஜெயந்தி கோலாகலம்! தடையை மீறி இறைச்சி விற்றவர்கள் மீது நடவடிக்கை!

 கு.அசோக்.

மஹாவீரர் ஜெயந்தி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் ஊர்வலம் நடத்தினர்.

வேலூர்,

வேலூர் ¢மாவட்டம், வேலூர் பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள சம்பவ்ந்தாத ஜெயின் ஆலயத்திலிருந்து மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவபடத்தை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து ஊர்வலமாக சென்றனர்.

 குதிரைகள் முன்னர் செல்ல மேளதாளங்ககுடன் நடனமாடியபடி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாடல்களை பாடிய படி சென்றனர்.

 சாந்திலால் ஜெயின் தலைமையில் பிரகாஷ் ஜெயின் ஊர்வலத்தை துவங்கி வைக்க ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது  அதே போல், ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது மேளதாளங்கள் இசைத்து வடஇந்திய பாணி நடனமாடி சென்றனர். இதில் ஆண் பெண குழந்தைகள் பங்கேற்றனர். திருப்பத்தூரிலும் இந்நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது.

 இந்த ஊர்வலங்களில் உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 குறிப்பு:- மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஜீவகாருண்யத்தை மையப்படுத்தி விதிக்கப்பட்ட இந்த தடையை ஊதாசீனப் படுத்தும் விதமாக பல இடங்களில் இறைச்சி விற்பனை நடந்தது.

 அதில் குறிப்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சர்வீஸ் லைனில் சுலைமான் என்கிற ஆட்டிறைச்சி கடையில் மஹாவீர் ஜெயந்தி அன்று  இறைச்சி விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மண்டலம் 2 ஐ சேர்ந்த அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்தியதில், இறைச்சி விற்பனை செய்வது உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே அவருக்கு 2000/- ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள்  எச்சரித்தனர்.

இதேபோல் வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதிக்கப்பட்டது.

மேற்படி நடவடிக்கையை வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி அவர்களின் உத்தரவின்படி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சிவகுமார் பாலமுருகன் ஆகியோர் மேற்கொண்டனர். இதில் சுமார் 100 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


அதேபோல் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது