பொங்கல் விழாவில் எம்.பி!
கு.அசோக்,
காட்பாடியில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வழங்கினார்.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல மாநில சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இதில் மாநில செயலாளர் கயல்விழி ,தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் கனேசன்,வேலூர்மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் .ஆர்.டி பழனி,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பங்கேற்று கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதில் ஆயிரக்கணக்கான கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என முழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.

admin
