அரையிறுதியில் இந்தியாவை விளையாட வைத்ததே தப்பு! கொதிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அரையிறுதியில் இந்தியாவை விளையாட வைத்ததே தப்பு! கொதிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர்!

 ம.பா.கெஜராஜ்,

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடின.   மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியை நடத்திய விதம் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது  போட்டி நடைபெறும் நாளுக்கு முன், திடீரென்று மைதானம் மாற்றப்பட்டது.

  இந்த சர்ச்சைக்கு தற்போது ஐசிசி ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், ''மைதானத்தை கடைசி நேரத்தில் கூட மாற்ற ஐசிசிக்கு அதிகாரம் உண்டு. ஆடுகளத்தில் பிரச்சினை இருந்தால் மாற்றித்தான் ஆக வேண்டும். ஐசிசியின் மேற்பார்வையுடன் தான் மும்பையில் ஆடுகளம் மாற்றப்பட்டது'' என தெரிவித்துள்ளது.

அப்படியிருக்க அரையிறுதி ஆட்டத்தில் விதிமுறைப்படி இந்தியாவை விளையாட வைத்திருக்க கூடாது, வெளியேற்றியிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் டேவிட் லாயிட் பேசியுள்ளார். அதில், ''உலகக் கோப்பை தொடரை நடத்துவது ஐசிசிதான். இந்தியா கிடையாது. இந்தியாவில் போட்டிகள் நடக்கிறது அவ்வளவுதான். இது ஐசிசி நிகழ்வு மாதிரி தெரியவில்லை. ஐசிசி இயக்குநர் ஆண்டி அட்கின்சன்தான் போட்டிகளுக்கான ஆடுகளத்தை தீர்மானிக்க வேண்டும். பிசிசிஐயோ அல்லது பிறநாடுகளை சேர்ந்தவர்களோ இதனை தீர்மானிக்க முடியாது''

 ஆனால் ''புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதிக்கான ஆடுகளத்தை இந்தியாதான் தீர்மானித்துள்ளது. ஆடுகளத்தை மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்ததும் உடனே மாற்றிவிட்டார்கள். இது ஐசிசியின் பலவீனத்தை காட்டுகிறது. ஆடுகளத்தை மாற்ற முடியாது, இஷ்டம் இருந்தால் விளையாடுங்கள், இல்லையென்றால் தகுதிநீக்கம் செய்யப்படுவீர்கள் என ஐசிசியால் ஏன் கூற முடியவில்லை? என்று இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் டேவிட் லாயிட் காட்டமாக விமர்சித்துள்ளார்.