குரிசிலாப்பட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை! 100-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

குரிசிலாப்பட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை! 100-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

செய்தி: ஜி.குலசேகரன்,
      திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குரிசிலாப்பட்டு காவல் நிலைய துணை ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெருமாப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமுதா என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததாகவும், அவருக்கு வெங்கடேஷ் ராவ் என்பவர் மதுபாட்டில்களை கொண்டு வந்து கொடுத்து வந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேஷ் ராவை போலீசார் கையும் களவுமாக பிடித்ததுடன், அவரிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் ராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் குமுதாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.