திண்டுகல் சீனிவாசனை தோற்கடிக்க களம் காணப்போகும் திமுக!

திண்டுகல் சீனிவாசனை தோற்கடிக்க களம் காணப்போகும் திமுக!

M.Delhi Rajan,

1972-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தான் அதிமுக-வின் முதல் வேட்பாளரான மாயத்தேவரை நிறுத்தி சுமார் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்துக் காட்டினார் எம்ஜிஆர்.

   அந்தத் தேர்தலில் சுயேச்சைகளுக்காக ஒதுக்கப்பட்ட சின்னமான இரட்டை இலை மாயத்தேவருக்கும் ஒதுக்கப்பட்டு, அது தனது முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டது.

   அது முதற்கொண்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக-வால் வெற்றி பெறவே முடியவில்லை. 

கடந்த கால் நூற்றாண்டில் திமுக திண்டுக்கல் தொகுதியில் ஒரே ஒரு முறை (1996) மட்டுமே வென்றது.

  ஆனால் அதிமுக இங்கு இதுவரை நான்கு முறை வென்றிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாக தொடர்ந்து திண்டுக்கல்லை தக்கவைத்து வரும் அதிமுக-வின் திண்டுக்கல் சீனிவாசன் இப்போது தனக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமென நம்புகிறார்.

   அவரது அந்தக் கனவை தகர்த்து இம்முறை திண்டுக்கல்லில் உதயசூரியனை ஜெயிக்க வைக்க வேண்டும் என உடன் பிறப்புகள் மும்முரம் காட்டி முயல்கிறார்கள்.

  ஆண்டு  வெற்றியாளர் கட்சி

1952  முனிசாமி பிள்ளை          இந்திய தேசிய காங்கிரஸ்

1957  எம்.ஜே. ஜமால் மொஹிதீன்

1962  ஆர். ரெங்கசாமி

1967  ஏ. பாலசுப்பிரமணியம்            இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு

ஆண்டு    வெற்றியாளர் கட்சி

1971  ஓ.என். சுந்தரம் பிள்ளை           இந்திய தேசிய காங்கிரஸ்

1977  என். வரதராஜன்                இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

1980           சுதந்திரமான

1984  ஏ. பிரேம்குமார்                 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989  எஸ்.ஏ. தங்கராஜன்          இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

1991  பி. நிர்மலா                அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996  ஆர். மணிமாறன்             திராவிட முன்னேற்றக் கழகம்

2001  கே. நாகலட்சுமி                இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

2006  கே. பாலபாரதி

2011

2016  திண்டுக்கல் சி. ஸ்ரீனிவாசன்           அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

     திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் 2006 முதல் தொடர்ச்சியாக வென்று வரும் அமைச்சர் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை 2016-ல் ஆத்தூர் தொகுதியில் கொண்டு போய் நிறுத்தினார் ஜெயலலிதா. அதேபோல், இம்முறை திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடிக்க ஐ.பெரியசாமியையோ அல்லது அவரது மகனையோ திண்டுக்கல்லில் நிறுத்தும் என்பது  திமுகவினரின் ஆசை.