நகைகடைகளில் செய்யப்பட்ட ரெய்டால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

நகைகடைகளில் செய்யப்பட்ட ரெய்டால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ஜி.கே.சேகரன்,

 மத்திய கலால் ஜிஎஸ்டி குழுவைச் சேர்ந்த¢ 20க்கும் மேற்பட்டோர் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஏதாவது விதிமீறல்கள் சிக்கியதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில்  நகை வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜின்னா ரோடு பகுதி மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதி உள்ளிட்ட இரண்டு இடங்களில் பூபாளம் என்கிற நகைக்கடைகள் உள்ளது.

 மேலும் திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை என்பதால் வரியைப்பு செய்திருக்கக்கூடும் என்ற காரணத்தால் கடையின் உரிமையாளர்  சுகுமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

 இதனால் நேற்று நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. முகூர்த்த நாளில் நகை வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்..

 அண்ணா நகர் பகுதியில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தில் இருந்து மத்திய கலால் துணை ஆணையர் அஜித்குமார் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் (ஜிஎஸ்டி) சுங்க தொடர்பு துறை  குழுவினர் சோதனை நடத்தினர்.

 இரவு எட்டு மணிவரை நடைபெற்ற சோதனையில் ஏதாவது சிக்கியதா என்று அதிகார பூர்வமாக சொல்லவில்லை.

   அதிகாரிகள் தெரிவித்த பின்புதான் ஏதாவது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா  மேலும் வரி ஏய்ப்பு ஏதாவது செய்தார்களா என தெரிய வரும்.