ஒரு சில போலீஸ்காரர்களுக்கு இதுதான் வேலையா? பாவம் பெண் மருத்துவர்!

ஒரு சில போலீஸ்காரர்களுக்கு இதுதான் வேலையா? பாவம் பெண் மருத்துவர்!

ம.பா.கெஜராஜ்,

   அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண் மருத்​து​வர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு 2 போலீஸ் அதி​காரி​கள் பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக அவர் குறிப்பு எழு​தி​ வைத்​துள்​ளார்.

   மகா​ராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்​டத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர் சதாரா மாவட்​டம் பால்​தான் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​யுள்​ளார்.

   இவரை போலீஸ் சப்-இன்​ஸ்​பெக்​டர் கோபால் பதானே என்​பவர் கடந்த 5 மாதங்​களாக பாலியல் தொந்​தரவு அளித்து வந்​துள்​ளார்.

  இந்​நிலை​யில் பிர​சாந்த் பங்​கர் என்ற போலீஸ் அதி​காரி​யும் இவருக்கு மனரீ​தி​யான தொந்​தரவு அளித்​துள்​ளார்.

  இதனால் அந்த மருத்துவர் பால்​தான் பகு​தி​யில் உள்ள விடுதி ஒன்​றில் நேற்று முன்​தினம் இரவு தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

 தனது மரணத்​துக்கு கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்​ளங்​கை​யில் குறிப்பு எழு​தி​யுள்​ளார்.

   இந்த தற்கொலை குறித்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, பெண் மருத்​து​வரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்​கொலை குறிப்பு குறித்து விசா​ரணை நடத்​து​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்த கொடுமை குறித்து அப்பகுதி டிஎஸ்பிக்கு கடந்த ஜூன் மாதம் மருத்துவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்​நிலை​யில் தற்​கொலை செய்து கொண்ட பெண் மருத்​து​வர் குறிப்​பிட்​டுள்ள போலீஸ் அதி​காரி​கள் இரு​வரை​யும் உடனடி​யாக சஸ்​பெண்ட் செய்​து, அவர்கள் மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​க மாநில முதல்வர் பட்னாவிஸ் உத்​தர​விட்டுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா பெண்கள் ஆணைய தலைவி ரூபாலி சாகங்கர் கூறுகையில், ‘‘பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாரா மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளனர்’’ என்றார்.