சாமான்யர்ளின் நம்பிக்கை பெற்ற டி.சுந்தர்ராஜ்-க்கு பிறந்த நாள் விழா! அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!
த.நெல்சன்,
சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் முன்னாள் பொருளாளரும், கிறிஸ்துவ மக்களின் தூணாகவும், சாமான்யர்ளின் நம்பிக்கை பெற்றவருமான திரு.டி.சுந்தர்ராஜ் அவர்களுக்கு நேற்று (23.10.2025) பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வேலூர், பாகாயத்தில் உள்ள ஜானகி திருமண மண்டபத்தில் இதற்கான நிகழ்ச்சியை அவரது நலம் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் ஏழை எளிய பெண்மணிகள் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் புல்லட் சுரேஷ் நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக அவர் மேளதாளங்கள் முழுங்க வரவேற்கப்பட்டார்.

மேலும் சித்தூர் மாவட்டம் ராசனபள்ளி பிரகாசம், பீட்டர் ஆகியோர் வந்து வாழ்த்தினர். அதே போல் அரசியல் பிரமுகர்கள் அதிமுக மா.செ.க்கள்.அப்பு, வேலழகன், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாலசந்தர், காட்பாடி ராமு, அமர், சத்தியநாராயணன், ராஜவேலு,பெத்தேல் ஆலயத்தைச் சேர்ந்த இர்வின் செல்லப் பாண்டியன், ஆயர்கள் சுரேஷ், மேனன், ஓய்வு பெற்ற ஆயர் ஜான் பாஸ்கர், பாகாயம் வில்லியம், ஜாவா மதி, காட்பாடி ரவி, அல்போன்ஸ், கசம் மேலாளர் ம.ரூபஸ், மக்கான் எச்.ஷரிப் பாஷா, பத்திரிகையாளர்கள் ம.பா.கெஜராஜ், ஜே.தேவபிரகாஷ், விசிக.வைச் சேர்ந்த கோட்டீ (எ) கோவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே போல் தொழிலதிபர்கள், விவிஐபிக்கள், பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த ஆயர் பெருமக்களும் ஊழியர்களும் பொதுமக்களும் வருகை தந்து திரு.சுந்தர்ராஜன் அவர்களை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுந்தர்ராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் பேனர்களும் கட்அவுட்டர்களும் மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை கேட்டரிங் நிபுணர் சுதாகர் செய்திருந்தார்.

admin
