கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்! காங்...ம.ஜ,தா.கூச்சல் புஸ்ஸ்ஸ்!

கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்! காங்...ம.ஜ,தா.கூச்சல் புஸ்ஸ்ஸ்!

Ma.ba.கெஜராஜ்,

  பா.ஜ,க ஆட்சி நடத்தும் மாநிலமான கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கனவே  தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 ஆனால் அதெல்லாம் அங்கு எடுபடவில்லை.

 அப்படியிருக்க  கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது, இந்த சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்த்தது.  அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்தது.

  இச்சட்டம் மக்கள் விரோதமானது, மனிதாபிமானமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது, கொடுமையானது என கூறியது. அத்துடன், இந்த சட்ட மசோதாவை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக் கூடாது, திரும்ப பெற வேண்டும் என்றும் இரண்டு பிரதான கட்சிகளும் கூச்சலிட்டனர்.

 அதன் உச்சகட்டமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்டபடி அமளியில் ஈடுபட்டனர்.

  ஆனாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

  ஆக, இனி அங்கு மதமாற்றத்துக்கு தடைவிதிக்கும் வகையில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தினால், வழக்கு பாய்ந்து சிறைத் தண்டனை கிட்டும்.