ஜம்மு காஷ்மீர் அரசமைப்பு சட்டம் 370ரத்து தொடர்பான வழக்கு!

ஜம்மு காஷ்மீர் அரசமைப்பு சட்டம் 370ரத்து தொடர்பான வழக்கு!

Nareah.N.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது செல்லும்...

மறுஆய்வு செய்ய குவிந்தன கோரிக்கை மனுக்கள்...
  
மே 1ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்...

2019ஆம் ஆண்டில், மத்திய பாஜக அரசு 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசியலமைப்பின்படி, இந்த முடிவின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்து,

1) ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு தனி இறையாண்மைக்கு உரிமை இல்லை.

2) குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை எதிர்த்துப் போராடுவது சட்டப்பூர்வமானது அல்ல.

3) சட்டப்பிரிவு 370 என்பது, ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.

4) அரசியலமைப்புச் சபை கலைக்கப்பட்ட பின்னரும் குடியரசுத் தலைவரின் உத்தரவுகளுக்கு எந்த தடையும் இல்லை.

5) குடியரசுத் தலைவரின் அதிகாரப் பிரயோகம் தீங்கிழைக்கும் வகையில் இல்லை மற்றும் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை.

6) லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுவது சட்டப்பூர்வமானது.

7) ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.

உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து செல்லாது என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வின்  இந்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகளிடமிருந்து, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனுக்கள் குவிந்துள்ளன.  இந்த மனுக்களை மே 1ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது