தன் உயிரை துறந்து கல்லூரி மாணவிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்!

தன் உயிரை துறந்து கல்லூரி மாணவிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் மகாலட்சுமி பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரிக்கு இராணிப்பேட்டை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து பெண் பிள்ளைகள் படிக்க வருகிறார்கள்.

  அப்படியிருக்க நேற்று காலை திருத்தணி. கேஜி கண்டிகை. ஆர்.கே பேட்டை. சோளிங்கர். வழியாக வாலாஜா ஆற்காடு செல்லும் கல்லூரி பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றியவர் ரவி வயது 70.

   இவர் நேற்று பேருந்தில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருத்தணியில் இருந்து கேஜி கண்டிகை. ஆர் கே பேட்டை. சோளிங்கா வழியாக வந்துள்ளார், வழியில் ஜம்பு குளம் கூட்ரோடு அருகே அரசு கலைக் கல்லூரி எதிரே வரும்பொழுது ஓட்டுநர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

  ஓட்டுநர் மாணவிகளை சத்தம் போட்டு அழைத்துள்ளார் மாணவிகள் அருகில் செல்வதற்கு முன்பே, பேருந்து நிலை தடுமாறி ஓட ஆரம்பித்துள்ளது இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் பதட்டத்தில் கத்தியுள்ளார்கள்.

  இருந்தும் ஓட்டுனர் ரவி வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகமான முயற்சி செய்து உள்ளார். அவரது முயற்சி வீணானதால் அருகே உள்ள புளிய மரத்தில் மோதி சாலையில் கீழே இறங்கி நிறுத்திவிட்டு ஸ்டேரிங் மீது சாய்ந்து இறந்துள்ளார்.

  பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் சத்தம் போடவே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பேருந்தில் இருந்த டிரைவர் ரவி யை வெளியில் தூக்கி எடுத்து சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

  அங்கு வந்த டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரவியின் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உடல் ஆய்வு கூறுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

   இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவிகள் சிறு கீறல்கள்  கூட இல்லாமல் உயிர் தப்பிய உள்ளனா.

 நேற்று மாணவிகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதினால் கல்லூரி நிர்வாகத்திற்கும் உடன் பயின்றவர்களுக்கும் போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர்.

  இருந்த போதும் கல்லூரி மாணவிகள் 2 மணி நேரமாக எந்த வாகனமும் இல்லாமல் தவித்தனர்.

  பொதுமக்கள் கல்லூரிக்கு போன் செய்தும் கல்லூரி நடவடிக்கை எடுக்க வில்லை. கல்லூரி மாணவிகள் இரண்டு மணி நேரமாக கல்லூரி தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இரண்டு மணி நேரம் கழித்து கல்லூரி பேருந்து வந்து மாணவிகளை அழைத்து சென்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.