வேலூரில் ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான B-20 கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்! 8 அணிகள் பங்கேற்பு – வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் டாக்டர் ஜி.வி. சம்பத் தகவல்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான B-20 கிரிக்கெட் போட்டி நாளை (நவம்பர் 28) தொடங்குகிறது.
வேலூர் டெல் வெடி மருந்து தொழிற்சாலையின் பின்புறம் அமைந்துள்ள வேலூர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் (Vellore Sports Foundation) மைதானத்தில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன.
மேலும், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் முதல் டிவிஷன் அணிகளுக்கான போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறுகின்றன.
இந்த கிரிக்கெட் போட்டி ராஜேஸ்வரி நினைவு கோப்பை என்ற பெயரில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்பு!
வேலூர் மாவட்டத்திலிருந்து வீனஸ் கிரிக்கெட் கிளப், வினோத் ஸ்போர்ட்ஸ் அகாடமி, குடியாத்தம் கிரிக்கெட் அகாடமி, யுனைடெட் ஏ கிரிக்கெட் கிளப், சபா குரூப் கிரிக்கெட் கிளப், எமர்ஜிங் XI கிரிக்கெட் கிளப், சன் ஷைன் கிரிக்கெட் கிளப், ப்ளூஸ்டார் கிரிக்கெட் கிளப் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டிகள் அடுத்த மாதம் இறுதி வரை பல்வேறு நாட்களில் நடைபெற உள்ளன.
வெள்ளை நிறப் பந்தைக் கொண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை நிற பேண்ட் மற்றும் கலர் டி-ஷர்ட் அணிந்து விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனைத் தலைவருமான டாக்டர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.

admin
