தமிழகத்தில் மற்றும் ஒரு சோகம்! 9 பேர் பலி!!
ஜி.சாந்தகுமார்,
தமிழகத்தில் மற்றும் ஒரு சோகம் நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் நேற்று திடீரென விபத்து ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்,இறந்தவர்களுக்கு இதற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அங்கு பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட துயர விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த வகையில் மின் உற்பத்தி தொடர்பான பெரும் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது ஏற்பட்ட விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இன்னும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். "எண்ணூரில் பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் மின்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் டாங்கோ தலைவர் ரகுராமனை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இறந்தவர்களின் உடலை சொந்த மாநிலமான அசாமிற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

admin
