அவதூறு போஸ்ட்டர் ஒட்டிவரை தட்டி கேட்ட தவெக நிர்வாகி தாக்கப்பட்டார்! கைது ஏதும் இல்லையாம்!
ஜே.தேவபிரகாஷ்,
39 உயிர்களை பலி வாங்கிவிட்டு தப்பி ஓடிய விஜய் என்கின்ற அரசியல் தற்குறியை கைது செய் என்று ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் நடைபெற்ற விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட பலி சம்பவம் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜயின் ரத்தம் தோய்ந்த கரங்களை உயர்த்தி காட்டுவத் போல் படத்தின் உடன் விஜயை கைது செய் 39 பேர்களை பலி வாங்கி தப்பி ஓடி உள்ள விஜயை கைது செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய சுவாரொட்டிகள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் ஒட்டப்பட்டு பின்னர் கிழிக்கப்பட்டுள்ளது .
இச்சம்பவம் காட்பாடி மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மாணவர் சங்கம் என்கின்ற பெயரில் ஒட்டப்பட்ட இந்த பேனரை உண்மையில் ஒட்டியவர்கள் யார்? பின்னர் ஏன் கிழித்தார்கள் ஒட்டியவர்களே பின்னர் கிழித்தார்களா என்கின்ற பல்வேறு விமர்சனங்களை இந்த பேனர் எழுப்பி உள்ளது..
இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதிலே வந்தது.
இந்த சூழ்நிலையில் பேரணாம்பட்டு பகுதியில் திமுகவை சேர்ந்த சிலர் விஜயை கைது செய் என்கின்ற ஒரு கண்டன பேனரை ஒட்டும் பொழுது தமிழக வெற்றிக்கழக விஜய் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது கைகலப்பில் முடிந்தது இது சம்பந்தமான வீடியோக்கள் வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதில் தவெக நிர்வாகி மதன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் தாக்கியவர்களை போலீசார் இன்னமும் கைது செய்யவில்லை.
ஏற்கனவே கட்டபஞ்சாயத்துக்கு பெயர் பெற்ற பேர்னாம்பட்டு காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

admin
