தொல்லியல் துறையில் அராஜக அதிகாரி! பக்தர்களுக்கு இடையூறு செய்வதாக ஆட்சியரிடம் புகார் மனு!

தொல்லியல் துறையில் அராஜக அதிகாரி! பக்தர்களுக்கு இடையூறு செய்வதாக ஆட்சியரிடம் புகார் மனு!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் தொல்லியல் துறையின் அராஜகம் சித்ரா பௌர்ணமி திருத்தன்று கோட்டை கோவிலுக்குள் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்காக சென்றனர்.

 அப்போது சுமார் 750 -க்கும் மேற்பட்ட பக்தர்களை தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோட்டையின் உள்புறம் வைத்து பூட்டி விட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

ஆகவே தொல்லியல்துறை அதிகாரி  மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கம் மற்றும் சில இயக்கங்கள் புகார் அளித்தன.  

    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் கடந்த 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் மேற்படி கோவிலுக்குள் சென்று சுவாமி வழிபாடு நடத்தினார்கள்.

 இந்த கோட்டை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் எந்த வித முன் அறிவிப்புமில்லாமல் கோவில் உள்ளே பக்தர்கள் சுமார் 750 -க்கும் மேற்பட்டோரை உள்ளே வைத்து கோட்டையின் கேட்டை இழுத்து பூட்டி விட்டனர்.
அதே நேரத்தில் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர். 

அப்போது  கோட்டையின் உள்ளே இருந்த பக்தர்கள் வெளியில் செல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டனர். 

ஆனாலும் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கோட்டையின் உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. 

இதனால் பக்தர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பொதுமக்கள் சென்று வர அனுமதித்தனர்.

 சுமார் முக்கால் மணி நேரம் கழித்து பக்தர்கள் சென்று வர அனுமதித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்பு லட்சுமி அவர்களிடம்வியாபாரிகள் சங்க ஜலகண்டீஸ்வரர் தரும ஸ்தாபனம் ஐயோ கூட்டாக புகார் மனு அளித்தனர்.

 அம்மனுவில் கோட்டை வெளி பகுதியில் புதியதாக பொருத்தப்பட்ட கதவை அகற்ற வேண்டும் புதிய தங்கத்தேரை காந்தி சிலையின் அருகே  இடது பக்கம் வைக்க இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

 கோவில் வழிபாட்டு முறையில் எந்த காரணம் கொண்டும் தொல்லியல் துறை தலையிட கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

 மேலும் 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டையை சரியாக பராமரிக்காமல் கோவில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களை குறை சொல்லி தடுக்கும் தொல்லியல் அதிகாரி அகல்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 மேலும் தொல்லியல் துறை அகல்யா இதுபோன்று பல இடையூறுகளை பக்தர்களுக்கும் கோவிலுக்கும் செய்து வருவதாக குழுவினர் தெரிவித்தனர்.