அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு சொந்தகாரர் அல்ல.....அமைச்சர் துரைமுருகன்! சத்துவாச்சாரி காந்திநகரில் இலவச மருத்துவ முகாம்!

அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு சொந்தகாரர் அல்ல.....அமைச்சர் துரைமுருகன்! சத்துவாச்சாரி காந்திநகரில் இலவச மருத்துவ முகாம்!

ஜி.கே.சேகரன்,

 அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு சொந்தகாரர் அல்ல அவரை குறுகிய வட்டத்தில் அடைத்துவிட்டார்கள் - இந்து மதத்திலேயே இருந்துகொண்டு இந்து மதத்தை உடைத்தவர் பெரியார்  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கா சிலைக்கு¢ மலர் தூவி நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

  பின்னர் அம்பேத்கரின் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நந்தகுமார்,அமுலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  பின்னர் சிறுத்தை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    அதன் பின்னர் காட்பாடியில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த சமத்துவ நாள் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 1523  பயனாளிகளுக்கு ரூ.11.   30 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

  இவ்விழாவில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர் இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  இவ்விழாவில் நீர் வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் தந்தை பெரியார் இங்கே தமிழ்நாட்டில் என்றால் வட இந்தியாவில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். தந்தை பெரியார் அம்பேத்கரிடம் சொன்னார் எப்படியாவது மக்களை திருத்த வேண்டுமென அதற்கு அம்பேத்கர் சொன்னார் இந்த மக்களை திருத்த முடியாது, அதற்கு பதில் புத்த மதத்திற்கு மாறுங்கள் என்றார்.

 ஆனால் தந்தை பெரியார் நான் புத்த மதத்திற்கு மாறினால் இந்து மதத்தை பற்றி பேச முடியாது என சொல்லி இந்து மதத்திலேயே இருந்துகொண்டு இந்து மதத்தை உடைத்தவர் பெரியார்.

  அம்பேத்கரை ஒரு சிலர் ஜாதி வட்டத்திற்குள் அடைத்துவிடுகின்றனர் அவர் கல்வியால் முன்னேற்றம் அடைந்தவர் அவர் அனைவருக்கும் போதுவானவர் அம்பேத்கர்.   அவர் ஒரு சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தான் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் ஆகவே  அம்பேத்கர் அனைவரும்சொந்தமானவர்   என பேசினார்.

சத்துவாச்சாரி,

 அம்பேத்கரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஐம்பெரும் விழாவாக சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அங்கு நிறுவப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு கதிரவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் விசிகவைச் சேர்ந்த ரீகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள இல்லத்தில் அன்னதானம் செய்யப்பட்டது.

 இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் அம்பேத்கரின் கருத்துகள் அடங்கிய கலை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  அதே போல் அனைத்து விதமான பரிசோதனைகள் செய்யக்கூடிய இலவச மருத்துவ முகாம் நாராயணி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. அதில் கண் சிகிச்சைக்கும் முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், பொது மக்கள் தாராளமாக கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 ஆம்பூர்,

 ஆம்பூர் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி அவர்கள் தலைமையிலும் விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜெய்சங்கர் தலைமையிலும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.