தீபாவளி அன்று 7463 பேர் 108 ஆம்புலன்ஸை பயன் படுத்தினர்!
ஜி.கே.சேகரன்,
இந்த ஆண்டு தீபாவளியில் 7463 கேசுகள் எடுக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்ததாக புள்ளி விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் அவசர மேலாண்மை சேவை தீபாவளி பண்டிகை - 20 அக்டோபர் 2025 அன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு செயல்பாடுகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மொத்த பயன் பெற்றவர்களின் நிலவரம்.
தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாடு முழுவதும் '108' ஆம்புலன்ஸ் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, குறிப்பாக முந்தைய ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிக தீ, தீக்காயம் மற்றும் தாக்குதல் கேஸ்கள் எதிர்பார்க்கப்படும்.
அதிக ஆபத்துள்ள இடங்களில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சாதாரண மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கேஸ்களின் ஒப்பீட்டை இங்கு வழங்கப்பட்டுள்ளது.
2025 தீபாவளி அன்றும் மற்றும் சாதாரண நாளில் கையாளப்பட்ட மொத்த கேஸ் மற்றும் தீபாவளி தின பயனாளிகளின் களின் விபரம், தீபாவளி பண்டிகைக்காக செயல்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
* தீபாவளி திருவிழாவின் போது 100% வாகன வசதியை அடைவதற்காக அனைத்து ஆம்புலன்ஸ்கள் சேவை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டன.
*அடையாளம் காணப்பட்ட தீபாவளி திருவிழா இடங்களில் அனைத்து ஆம்புலன்ஸ்களும் முன்னேச்செரிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது.
*'108', '104' மற்றும் '102' க்கான அவசரகால பதிலளிப்பு மையங்கள் 19-ஆம் தேதி அக்டோபர் 2025 முதல் மூன்று ஷிப்டுகளில் முழு பணியாளர்களுடன் அடிப்படையில் செயல்பட்டன.
*108 துணை நிலை ஊழியர்கள் அந்தந்த மாவட்ட 108 அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு ஷிப்டுகளில் பணியாற்றினார்கள்.
*இந்த அடிப்படை மற்றும் மூலோபாய அணுகுமுறை, தீபாவளி பண்டிகையின் போது எங்கள் 108 செயல்பாடுகளை ஆதரிக்க முழு பணியாளர்களுடன், தேவையான நேரத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் சென்றடைய முடியும் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
சாதாரண நாட்களில் 5051 கேஸ்கள் எடுக்கப்பட்டன.
இந்த ஆண்டு தீபாவளியில் 7463 கேசுகள் எடுக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்த ஆண்டு தீபாவளியில் மொத்த அவசரநிலைகள் வழக்கமான நாட்களை விட 48% கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்கள் அதிகம் பயன்பெற்றனர்.
சாதாரண நாட்களுக்கும் இந்த ஆண்டு 2025 தீபாவளி நாளுக்கும் இடையிலான அவசரநிலை வாரியான ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.

admin
