1977 ஆம் ஆண்டு கட்டிய மேம்பாலம் "கன்" மாதிரி நிற்கிறது ஆனால்!

1977 ஆம் ஆண்டு கட்டிய மேம்பாலம் "கன்" மாதிரி நிற்கிறது ஆனால்!

ம.முருகன்,  

 திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் டு ஆரணி செல்லும் சாலையில் செய்யாற்றில் 1977 ஆம் ஆண்டு கட்டி திறக்கப்பட்ட மேம்பாலம் கம்பீரமாக இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது.

  ஆனால் இதன் பிறகு ஓதலவாடி அருகே கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

  இதேபோல் செங்கம் அருகே 16 கோடியில் கட்டப்பட்ட பாலமும் அடித்துச் செல்லப்பட்டு தரை மட்டமானது.

  இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், அப்போதெல்லாம் ஒப்பந்ததாரரிடம் ஏதோ ரெண்டு பர்சன்ட் கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை கொடுப்பார்கள் ஒப்பந்ததாரரும் அவர்கள் பெயர் இருக்க வேண்டும் என்று வேலை செய்வார்கள்.

   இப்போது பொது மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவு சுருட்டினாலும் பரவாயில்லை என்று வேலை செய்வதும், அதை கண்டும் காணாமலும் செல்லும் மக்களுமே காரணம்.