விஜயதாரணி விஜய்கட்சியில் இணையப் போகிறாராமே?!

விஜயதாரணி விஜய்கட்சியில் இணையப் போகிறாராமே?!

ம.பா.கெஜராஜ்,

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற விஜயதரணி, தற்போது பாஜக வில் உள்ளார். அவரை அக்கட்சி ஓரம் கட்டி வைத்திருப்பதால் அம்மையார் விஜய் கட்சியில் சேத்ரவிருப்பதாக கூறப்படுகிறது.

  முன்னதாக விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை.

 கட்சியில், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.

அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், "காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை" என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.

 அப்படியிருக்க  விஜயதரணி பாஜகவில் இணைந்ததுமே பாஜக அவருக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் எனப் பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

   அடுத்ததாக, கட்சியில் தனக்கு முக்கிய பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அண்மையில் மாநில பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த போது கூட ஓரங்கட்டப்பட்டார்.

   இந்நிலையில் விஜயதரணி விஜய் கட்சியில் இணையக்கூடும் என்றும் சிலர் செய்திகளை பரப்பினார்கள்.

  ஆனால், அவரை இம்முறை தாமரை சின்னத்தில் போட்டியிடவைக்க பாஜக தரப்பில் ஆலோசனை நடப்பதாகச் சொல்கிறார்கள்.

   குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கென தனித்த செல்வாக்கு உள்ளது. அதற்குப் போட்டியாக பாஜகவும் இப்போது இந்த மாவட்டத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள 6 தொகுதிகளில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் இப்போது 'கை'வசம் இருக்கிறது.

   வரும் தேர்தலுக்கு குமரிமாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குமே அனைத்து முக்கிய கட்சிகளிலுமே கடும் போட்டி நிலவுகிறது.

   இதில், பாஜக தரப்பில் நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிகளை குறிவைத்து களப்பணி செய்கின்றனர். இதில், விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியையே இம்முறை களமிறக்க பாஜக மும்முரம் காட்டுகிறது.