போலிஸ் வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்!

முனிசாமி,
போலிசார் சென்ற காவல் பேருந்து நிலை தடுமாறியதால் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போலிசார் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காவல் வாகனம் பாதுகாப்பு பணி முடித்து இன்று (31.10.21)திரும்பி வரும் போது சிவகங்கை அருகில் விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணம் செய்த காவலர்களில் ஏழு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.