மகாராஷ்டிராவை பாஜக கூட்டணி தக்கவைக்குமா ! தட்டிபறிக்குமா சிவசேனா!

மகாராஷ்டிராவை பாஜக கூட்டணி தக்கவைக்குமா ! தட்டிபறிக்குமா சிவசேனா!

 ம.பா.கெஜராஜ்,

 மகாராஷ்டிரா மற்றும் ஜார்கன்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது. அதில் மகாராஷ்டிராவில் கள நிலவரத்தை பார்ப்போமால், அங்கு 288 தொகுதிகள் உள்ளன.

  மொத்தம் 9.63 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இதில் 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 2,086 பேர் சுயேட்சைகள். மகாயுதி, மகா விகாஸ் அகாதி என இரு பெரும் கூட்டணிகள் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

மகாயுதி கூட்டணி

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன. (தேசியவாத காங்கிரஸை உடைத்தவர்).

மகா விகாஸ் அகாதி கூட்டணி

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் நட்சத்திரவேட்பாளர்களின் பட்டியலைப் பார்ப்போம்.

கோப்ரி பச்பகாடி - ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா)

சகோலி - நானா படோலே (காங்கிரஸ்)

நாக்பூர் தென்மேற்கு - தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக)

ஓர்லி - ஆதித்ய தாக்கரே (சிவசேனா உத்தவ் தாக்கரே)

ஓர்லி - மிலிந்த் தியோரா (சிவசேனா ஷிண்டே)

பந்த்ரா கிழக்கு - ஸஷீன் சித்திக் (தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்)

மன்குர்த் சிவாஜி நகர் - நவாப் மாலிக் (தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்)

பாராமதி - அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்)

டஸ்கோவன் - ரோஹித் பட்டீல் (தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார்).

  2014 மற்றும் 2019 தேர்தல்

கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜகவின் பலம் வெளிப்படையாக தெரிகிறது.

 அந்த வகையில்,  2014ல் 122, 2019ல் 105 என வெற்றி பெற்றுள்ளன. அதுவே சிவசேனா கட்சியை எடுத்து கொண்டால் 2014ல் 63, 2019ல் 56 என கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி 2014ல் 42, 2019ல் 44 எனவும், தேசியவாத காங்கிரஸ் 2014ல் 41, 2019ல் 54 எனவும் வெற்றி பெற்றன என்பது நினைவு கூறத்தக்கதாகும்.