சந்தன மரங்கள் அபேஸ்!

சந்தன மரங்கள் அபேஸ்!

KU.SEKARAN,

ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில்  வளர்ந்திருந்த மூன்று சந்தன  மரங்களை வேரோடு வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்கள்/

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, கோடியூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ராஜேஷ் (46) என்பவருக்கு சொந்தமாக  2 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

   இந்த நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி காந்திநகர் பகுதியை சேர்ந்த மை கண்ணன் என்பவரின் மகன் கணபதி ( 72 ) என்பவர் அந்த நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

 அந்த விவசாய நிலத்தில் ஆங்காங்கே சிறுசிறு சந்தன மரங்கள் தானாகவே வளர்ந்து வந்துள்ளது.

  நேற்று நிலத்தை சுற்றி பார்க்க நிலத்தின் உரிமையாளர் ராஜேஷ் சென்றபோது மூன்று சந்தன மரத்தை வேரோடு மர்ம நபர்கள் யாரோ வெட்டி எடுத்து சென்றது தெரிய வந்தது.

 பின்னர் இது குறித்து ராஜேஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார்  வழக்கு பதிவு செய்து சந்தன மரத்தை வேரோடு வேட்டி கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.