கைது செய்யப்பட்ட விஐடி மாணவர்களுக்கு கஞ்சா என்ணெய் சப்ளை செய்தது யார்!?
ம.பா.கெஜராஜ்,
வேலூர் என்றாலே போதை பொருள் புழங்கும் இடம் என்பதைப்போல சில கைது சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதியில் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட மெத்தாபெட்டமைன் மற்றும் கொக்கைன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
கேரளவைச் சேர்ந்த டாக்டர் பெல்கிங்கின் என்பவர் தங்கியிருந்த அறையிலிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்ட வடக்கு காவல்நிலையத்தில் அமலாக்கத்துறையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் டாக்டர் பெல்கிங்கின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் விஐடி என்கிற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மீது கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் போன்ற போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஏழு மாணவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவைகளை சப்ளை செய்து வருவது யார் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது பற்றின விவரம் வருமாறு, வேலூர் தொழில் நுட்ப பல்கலைகழகம் என்கிற பெயரில் காட்பாடி பகுதியில் பலநூறு ஏக்கர் அளவில் பல்கலை கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியார் பல்கலைகழகமான இது விஐடி என்று வடமாநிலத்தில் சற்று பிரபலம் என்பதால் சுமார் 15 ஆயிரம் வரை வடமாநில மாணவர்கள் இங்கு தங்கி படித்து செல்கின்றனர்.
அதற்கு வசதியாக பல்கலை கழகத்தில் பல விடுதிகள் உள்ளன. விடுதியில் இடம் கிடைக்காதவர்கள் தனியார்களுக்கு சொந்தமான வீடுகளில் தங்கி பயில்கின்றனர்.
அந்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட விஐடி மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர்.
அப்படியிருக்க அந்த மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி வருவதாக கட்டிட உரிமையாளர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் பிரம்மபுரம் காவல்துறையினர், மேற்படி மாணவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் விஐடியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய்யை பதுக்கி வைத்து பயன்படுத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் விஐடி மாணவர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மூன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் என நான்கு பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1.ஆயுஷ் சுக்லா, 2.வேவுசிங்,3.ஆதர்ஷ், 4.அரியானா மாநிலத்தை சேர்ந்த கேசவ், 5.ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் சரண், 6.காட்பாடி, வைபோ நகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்ய பிரதான், 7. காட்பாடி செல்வம் நகர் பகுதியைச் சேர்ந்த சப்பான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட மாணவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 350 மில்லி கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதை அறிந்த பல்கலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களை சஸ்பெண்டு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு.வேலூர் பிலிப் அவர்கள் தெரிவிக்கையில்,
வசதி படைத்தவர்களான அம்மாணவர்கள், அவர்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை இங்கும் தொடர்வதால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் சர்வசாதாரணமாக எங்கள் பகுதியில் புழங்குகிறது.
இந்த பக்கம் மாணவிகள் சிலர் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை காணலாம். அக்கம் பக்கம் தோப்புகள் மற்றும் ஒதுக்குபுறமான இடங்களில் அவர்கள் செய்யும் சேட்டைகள் அநியாயத்தின் உச்சகட்டம். அந்த அளவுக்கு கலாச்சார சீர்கேடு அங்கு நடத்தப்பட்டுவருகிறது.
இதை உள்ளூவாசிகள் தட்டிக்கேட்க முடிவதில்லை. போலீசில் புகார் சொன்னாலும் நிர்வாகத்துக்கு விசுவாசம் காட்டி நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அவை அச்சில் ஏறாமல் வாலாட்டிவிடுவார்கள்.
சும்மா "அச்" என்று தும்பல் போட்டாலே அரை பக்கம் வெளியிட்டு தொழில் தர்மத்தை காப்பவர்கள் இவர்கள் விஷயத்தில் அனைத்தையும் பொத்திக் கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறார்கள்.
இருந்த போதும் இளம் ஊடகவியலாளர்கள் பத்திரிகை தர்மத்தை காக்கும் வகையில் இந்த கைது விவகாரம் குறித்த செய்தியை மக்கள் அறிய செய்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் விஐடியை சுற்றிலும் உள்ள எந்த கடைகளிலும் சிகெரெட் விற்க தடை இருந்தது. எந்த மாநில மாணவர்கள் என்றாலும் அவர்களின் பெற்றோர்கள் எத்தனையோ கனவுகளுடன் இந்த கல்லூரியில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். லட்சக்கணக்கான பணத்தை அள்ளி செலவிட்டுவருகிறார்கள்.
அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் மாணவர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் நிர்வாகத்துகு அவப்பெயர் தேடித்தரும் செயலாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலமும் சிதைந்து போனது.
இப்போ பாருங்க, ஜெயில், பெயில் என்று அலைய வேண்டியதாகிவிட்டது. போலீஸ் கூட இதோடு விடக்கூடாது, அனைத்து விடுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும். அதற்கு பலதரப்பின் ஒத்துழைப்பும் தேவை. அப்போதுதான் கலாச்சாரம் மிகுந்த பழைய வேலூரைக் மீட்க முடியும் என்று சொன்னார்.
இந்நிலையில் காட்பாடி பகுதிக்கு போதைப்பொருள்கள் எங்கிருந்து, எப்படி சப்ளை ஆகின்றது என்கிற சில தகவல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக பார்சல் சர்வீஸ் மற்றும் கூரியர் சர்வீஸ் மூலமாக இவை சப்ளை செய்யப்படுகிறது. சென்னை டூ வேலூர் வந்து செல்லும் வாகனங்கள் பல இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதற்கான அலுவலகம் காட்பாடியில் உள்ளதாகவும், வேலூர் பில்டர்பெட் ரோட்டில் கூட அவர்கள் சரக்குகளை பரிமாற்றம் செய்து வருவதாகவும் தகவல்.
இதற்காக ஒரு மத்தத்தின் பெயரைக் கொண்ட கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. கூடவே முன்னாள் மாணவர்களும் இதில் பங்கு பெற்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு சில அரசியல்வாதிகளின் நட்பும் ரவுடி பட்டாளங்களின் தொடர்பும் உள்ளதாம்.
அது சரி,

admin
