தொழிலாளர்களை ஏமாற்றும் நலத்துறை அதிகாரிகள்!
கு.அசோக்,
அரக்கோணம் அருகே இச்சிபுத்தூரில் செயல்பட்டு வரும் எம்.ஆர் எப் நிறுவனம் தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடிப்பதால் அண்ணா தொழிற்சங்கம் உட்பட ஏழு சங்கங்கள் தொழிலாளர் நலத்துறையில் புகார் விசாரணைக்கு வர நிறுவனம் மறுப்பு தொழிலாளர் சமரச மையத்தில் அதிமுக தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் உள்ளது. அங்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சமரச தீர்வுக்காக நேரில் ஆஜரானார்கள்.
அப்போ)து, அண்ணா தொழிற்சங்க சேர்ந்த மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாநில செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் இன்று ஆஜராகி எம்.ஆர் எப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கு குறித்து எடுத்து கூறினார்கள்.
இராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள இச்சிபுத்தூரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் எம்.ஆர் எப் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டு தோறும் ஊதிய பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை எம்.ஆர் எப் நிறுவனம் போட வேண்டும்.
ஆனால் அங்கு எட்டு தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் எம்.ஆர் எப் நிறுவனத்தின் கைபாவையாக உள்ள ஒரே ஒரு சங்கத்தினை மட்டும் அழைத்து 18/1 ஊதிய ஒப்பந்த உயர்வை போட்டனர்.
இது தொழிலாளர் விரோத போக்காகும், இந்த நிலையில் இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கம் சென்னை தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளித்தது இதனால் இப்புகாரினை வேலூரில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் விசாரணைக்கு அழைத்தனர்.
அதை நம்பி வந்த அண்ணா தொழிற்சங்கத்தினர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அங்கு அதிகாரியுமில்லை சம்பந்தபட்ட எம்.ஆர் எப் நிறுவனமும் பேச்சுவார்த்தைக்கு விசாரணைக்கு வரவில்லை.
இதனால் சமரச மையத்தில் மூன்றாம் தேதி அந்த நிறுவனத்தை வரவழைத்து விசாரணை நடத்துவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதமைத் தொடர்ந்து எம்.ஆர் எப் நிறுவனம் தொழிற்சங்கங்களையும் மதிப்பதில்லை தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடிக்கிறது என ஒரு தொழிற்சங்கம் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் அண்ணா தொழிற்சங்கமும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்
தொழிலாளர் நலத்துறையையும் அரசையும் இந்த எம்.ஆர் எப் நிறுவனம் மதிப்பதில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

admin
