மாணவர் சாவுக்கு நட்பை மீறிய உறவு காரணமா?பாதிரியார்களையும் விசாரிக்கனும்! களம் இறங்கிய எஸ்.பி.மயில்வாகனம்!
ம.பா.கெஜராஜ்,
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் மாயமான நிலையில் பள்ளியில் இருக்கும் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் அவர் சடலமாக மிதந்தார். இந்த விவகாரத்தினால் களத்தில் குதித்த பல்வேறு கட்சிகள்! சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்தம்பித்த திருப்பத்தூர் சமாளித்த வேலூர் எஸ்.பி. நட்பை மீறிய உறவா என விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன பெற்றோர்கள் எனது மகனை காணவில்லை என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் கத்தி அழுதனர். பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு அந்த கிணற்றில் விழுந்தான் என பெற்றோர்கள் கேள்வியும் எழுப்பினர்.
இந்த நிலையில் பள்ளியை மூட வேண்டும் மேலும் பாதிரியாரை கைது செய்ய வேண்டும் தனது மகன் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நகர காவல் நிலையம் முன்பு அதிமுகவினர், பாரதிய ஜனதா கட்சியினர், தமிழக வெற்றிக்க கழகம், மற்றும் இந்து மக்கள் கட்சியினர், விஷ்வ இந்து பர்சித் கட்சியினர் என பலர் ஒவ்வொரு பக்கமும் சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தினர்.

மேற்படி பள்ளியின் நிர்வாகம் உள்ளூர் பிரமுகர்களுக்கும், மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றும், மாணவர் சேர்க்கை நேரத்தில் பந்தா காட்டி பெரிய ம.... போல காட்டிக் கொள்வதாக கூறப்படுகிறது.
இதனாலேயே உள்ளூர் கட்சிகள் இந்த விவகாரத்தை மறியல் பிரச்சனையாக மாற்றினர்.
இதன் காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் திருப்பத்தூர் நகரமே ஸ்தம்பித்து பரபரப்பு காணப்பட்டது.
திருப்பத்தூர் எஸ்பி பொறுப்பு மயில்வாகனம் நேரடியாக களம் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் நான் மயில்வாகனன் வந்துள்ளேன். உண்மை என்னவென்று கண்டிப்பாக விசாரணை நடத்தி கண்டுபிடிப்போம்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. பள்ளிக்கூடத் தரப்பில் உரிய விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பேசி போராடிய உறவினர்களை கலைந்து போக செய்தார்.
காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
சம்மந்தப்பட்ட மாணவருக்கும், அதே விடுதியில் உள்ள மாணவருக்குமிடையே நட்பை மீறிய உறவு இருந்துள்ளது. அதை கண்டித்த பள்ளிக்கூட நிர்வாகம் அந்த நட்பை பிரித்துவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டான்.

அவன் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் கிணற்றில் உள்ள மீன்கள் கடித்ததாக இருக்கலாம்.
கிணறு மூடிக்கிட்டந்தாலும், பக்கவாட்டில் ஒரு வழி உள்ளது அதன் வழியாக இறங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கின்றனர்.
ஆனால் அந்த வழியில் முகிலன் நுழைய முடியாது என்கிறார்கள் உள்ளூர் ஊடகவியலாளர்கள்.
சிறுபாண்மையினர் கல்விக்கூடங்கள் என்கிற பெயரில் மர்மதேசம் போல பள்ளிகளை நடத்துபவர்களுக்கும் அனைத்து சட்டத்திட்டங்களும் பொருந்தும் என்பதை இந்த விஷயத்திலாவது காவல் துறை நிரூபிக்கவேண்டும். மாணவனுடன் நட்பை மீறிய உறவு என்று திசை திருப்ப பார்க்கிறார்கள் என்று கூறும் உள்ளூர் நபர்கள், நட்பை மீறிய உறவில் பாதிரியார் எவரேனும் பங்கு வகிக்கிறார்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்கின்றனர்.

admin
