கள்ள உறவு மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட வாலிபர்கள்!

கள்ள உறவு மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட வாலிபர்கள்!

ஜி.கே.சேகரன்,

 கள்ள உறவு காரணமாக அண்ணி மற்றும் 2 பிள்ளைகளை அழைத்து சென்ற தம்பியை தட்டிக்கேட்ட அண்ணனுக்கு கத்தி மற்றும் ஆயதங்கள் கொண்டு தாக்குதல். காப்பாற்ற சென்ற 4 பேர் படுகாயம்.3 பேர் போலீஸார் கைது செய்து விசாரணை.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(32).இவருடைய மனைவி உமா.

  இவர்களுக்கு திருமணம் நடந்து 10 வயதில் ஒரு பெண் மகளும், 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.

  இந்நிலையில் பிரபுவின் தம்பி சக்திவேல்(28) என்பவருக்கும், உமாவுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

  இதன் அடிப்படையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சக்திவேல் உமா மற்றும் அவரது பிள்ளைகளை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு பிரபு அவருடைய தம்பி சக்திவேலிடம் மனைவி உமா மற்றும் பிள்ளைகள் குறித்து கேட்டுள்ளார்.

  அப்போது இருவருக்கு இடையில் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சக்திவேல் அங்கிருந்து புறப்பட்டு சென்று அவருக்கு ஆதரவாக 15 க்கு மேற்பட்ட ஆட்களை அழைத்து கொண்டு பிரபு மீது தாக்குதல் நடத்தசென்றுள்ளார்.

  இதனை அறிந்த பிரபு, உதவி கேட்டு தன்னுடய சித்தப்பா சம்பத் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  சிறிது நேரத்தில் சக்திவேல், பிரபுவை தேடி தன்னுடைய சித்தப்பா வீட்டிற்க்கு  சென்ற போது அங்கே அவருடைய சித்தப்பா சம்பத்(50), இவருடைய மகன்கள் உமாபதி(28), விக்னேஷ்(26),பூபதி(24) ஆகியோர் பிரபு மீது தாக்குதல் நடத்த தடையாக இருந்ததால் அவர்கள் 4 பேர் மீது 15 க்கு மேற்பட்ட சக்திவேல் ஆதரவாளர்கள்கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.

 இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.மேலும் வீட்டில் உள்ள பீரோ கண்ணாடி ஆகியவை உடைத்து தும்சும் செய்தனர்.கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவலின் பேரில் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கே முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  கிராமமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.