சேவல் சண்டை நடத்தியவர்களிடம் ஆட்டையை போட்ட போலிசார்!
ம.தமிழரசன்,
திருச்சி மாவட்ட, மணப்பாறை அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது பிடிபட்டவர்களிடம் இருந்த பந்தய பணத்தில் பெரும் பகுதியை போலிசார் ஆட்டையை போட்டுவிட்டனராம்.
மணப்பாறை வட்டம், வையம்பட்டி அடுத்த திம்மனூர் குளத்தூர் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக சம்மந்தப்பட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சேவல் சண்டை நடத்திய பூசாரி பட்டியைச் சேர்ந்த தினேஷ், சங்கா,தவளை வீரன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்,மத்த கோடாங்கிபட்டி சேர்த்த ஜெயராம்,ஆசாத் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்,உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பந்தயம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பல வேடிக்கை பார்க்க வந்தவர்களுடையது ஆகும்.
அவர்களிடம் கட்டிங் பெற்றுக் கொண்டு சில பல டூ வீலர்களை வழக்கில் சேர்காமல் வழியனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் பணத்தில் பெரும் பங்கை அபேஸ் செய்துவிட்டதாம் போலிஸ்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வையம்பட்டி காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அது சரிங்கோ..!

admin
