பள்ளிகளுக்கு இன்று முதல் விடுப்பு! எலெக்ஷன் ரிரசல்ட்டுக்கு பின்னர் ரீ ஓப்பனா?

பள்ளிகளுக்கு இன்று முதல் விடுப்பு! எலெக்ஷன் ரிரசல்ட்டுக்கு பின்னர் ரீ ஓப்பனா?

 டி.இ.முகமது,

 1 முதல் 12 ஆம் வகுப்புவரையிளான மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் முடிவட்ய்ந நிலையில் இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

  ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ரிசல்ட் முடிந்த பின்னரே மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வு கல்வித் துறை திருத்தி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்துவிட்டது. 

  தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

 ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.