முன்னாள் ரைட்டர் உதவியுடன் பாலாற்றில் கள்ளச்சாராயம் விற்பனை!

ம.பாகெஜராஜ்.

படங்கள். உ.சசிகுமார்,

பாலாற்றில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ...ஆனால் கள்ளச்சாராயம் தொடர்ச்சியாக விற்கப்பட்டுவருகிறது.   

இது பற்றின விவரம் வருமாறு,

வாணியம்பாடி காவல் சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது. இதற்கு சப்டிவிஷன் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு எழுத்தர் நேரடியாகவே சப்போர்ட் செய்வதாக தகவல். அவர் கள்ளச்சாராய முதலாளிகளிடம் மாமுல் பெற்றுக் கொண்டு உயர் அதிகாரிகளின் பெயரை கெடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சப்டிவிஷனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உறையில் அடைத்து விற்கப்படும் ஒரு  இந்த கள்ளச்சாராய விற்பனையானது, ஓரிரு  இடத்தில் நடக்கவில்லை.

 மாறாக நூற்றுக்கணக்கான பகுதிகளில் கடை போட்டிருக்கிறார்கள். அதிலும் கிராமிய காவல் நிலைய பகுதிகளில் அதிகம்.

 அந்த வகையில், சின்னதாய் அம்மாள் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் புத்து கண்ணு பகுதியிலும், சுகுமார் மேட்டுப்பாளையம், அம்புலு, வடக்குபட்டு (மொத்த கொள்முதல் வியாபாரியாம்), ரங்கன் தும்பேரி, அருண் உதயந்திரம், மாது மேட்டுப்பாளையம், நடராஜன் மதனஞ்சேரி,அருண் மேட்டுப்பாளையம், சசி நடுப்பட்டறை, பாபா அம்பலூர், இளம்பெண் பூஞ்சா வட்டம், சுரேஷ் பெரிய பேட்டை. சவுரம்மா துறையேரி என சாராய வியாபாரிகளின் இன் நீண்டுக்கொண்டே போகும்.

 தேவை ஏற்படின் அடுத்த கட்டுரையில் கள்ளச்சாராய வியாபாரிகளின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

 இந்த சாராய வியாபாரிகளுக்கு மாதகடப்பா, கோரிபாளையம், தும்பேரி, திகுவாபாளையம் போன்ற மலை காடுகளில் சாராயம் காய்ச்சி சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக ஆர்.சி புத்தகம் இல்லாத டூவீலர்கள் பயன்படுத்தப்படுகிறது. மாத சம்பளத்துக்கு ஆட்களும் வேலை செய்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு சப்டிவிஷன்களில் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலையங்கள் உள்ளன. அந்த வகையில் வாணியம்பாடியிலும் இருக்கிறது? ஆனால் அவர்கள் செயல்பாடுகளை அங்கேயே பழம் திண்று கொட்டை போட்ட நபர்கள் மொக்கையாக்கி வருகிறார்கள்.

  ஒரே இடத்தில் சீட்டை தேய்த்துக்கொண்டிருக்கும் அது போன்ர சிலர், அங்கு புதியதாக பொறுப்பேற்கும் அதிகாரிகளுக்கு "வருமானத்துக்கான" வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

 இதனால் துடிப்புடன் வரும் அதிகாரிகள் கப்சிப்பென்று ஆகிவிடுகின்றனர். இல்லையென்றால் அவர்களை சுற்றி சாராயம் காய்ச்சுவதையும், அதை பாலாறு உள்ளிட்ட பகுதிகளில் கடை போட்டு விற்பதையும் ஊக்குவிப்பார்களா?

 சரி விஷயத்துக்கு வருவோம் இந்த கட்டுரையின் முதல் பத்தியில் சப்டிவிஷன் அலுவலகத்தில் எழுத்தராக இருந்தவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, அவரது பெயர் சபீர், அவர் திம்மாட்டை காவல் நிலையத்தின் போலிஸ்காரர் ஆவார். ஆனால் அவர் சப்டிவிஷன் அலுவலகத்துக்குள் நுழைந்துக்கொண்டு கள்ளச்சாராய வியாபாரிகளிடம் வார மாமுல் பெற்று வருகிறார். அதற்காக அதிகாரியின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார்.

  இவர் ஏற்கனவே திருப்பத்தூர் சப்டிவிஷன் அலுவலக எழுத்தராக இருந்த போது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தது. திருப்பத்தூரில் அவர் பெரிய பங்களாவே கட்டியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்தே அங்கிருந்து அவர் மாற்றப்பட்டார்.

 அங்கு இங்கு என்று இருந்த அவர் தற்போது வாணியம்பாடி சப்டிவிஷனுக்கு தாவி அந்த பகுதியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஃபுல் சப்போர்ட் செய்து கலால் போலிசாரை மிஞ்சி வருகிறார்.  

இதுகுறித்து வாணியம்பாடி டிஎஸ்பி திரு விஜயகுமார் அவர்கள் தெரிவிக்கையில், இந்த தகவல் கிடைத்தவுடன் நேற்று இரவு முதல் கள்ளச்சாராய விற்பனையாளர்களை பிடித்து வருகிறோம். இன்றும் சிலர் பிடிபட்டு இருக்கிறார்கள்.

அதேபோல் சாராயம் இங்கு காய்ச்சப்படுவதில்லை.  ஆந்திர மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து இங்கு கூலிச் தொழிலாளர்களிடம் விற்பனை செய்கிறார்கள். 

அதேபோல் இங்கு எழுத்தராக இருந்த சபீரை அப்பணியில் இருந்து வேறு பணிக்கு பயன்படுத்தி வருகிறோம். 

மேலும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.