தீபாவளி போனஸ் மற்றும் நிலுவை தொகை கேட்டு போராட்டம்!

 தீபாவளி போனஸ் மற்றும் நிலுவை தொகை கேட்டு போராட்டம்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை அருகே முறையாக சம்பளம் வழங்காத கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் கம்பெனி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இராணிப்பேட்டை அடுத்த நெல்லிகுப்பம் சிப்காட் பேஸ் - 3 யில்  யூயாஓ    மோல்ட்ஸ் என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது.

  இந்த கம்பெனியில் ஷூக்கு தேவையான பாட்டம் மோல்ட் தயாரிக்கும் பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதில் பணியாற்றக் கூடிய கம்பெனி ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக முறையான சம்பளம் வழங்காமல்  பாதி சம்பளம் மட்டுமே ஊழியர்களுக்கு வழங்குவதுடன், கடந்த 10 மாதகாலமாக பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் வைப்பு நிதி விடுவிக்காமலும் உள்ளது நிர்வாகம்.

  தற்போது தீபாவளி என்பதால் போனஸூம் வழங்காமல் நிர்வாகம் ஊழியர்களை ஏமாற்றி வருவதாக கம்பெனி வாயிற்படியில் சுமார் 35க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   கடந்த பத்து நாட்களாக இதற்கான தீர்வு கிடைக்க வேண்டுமென பல்வேறு கட்ட கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து நிர்வாகம் எங்களை ஏமாற்றி வருவதாகவும், அதேபோல் குழந்தை, மனைவிக்கு தீபாவளிக்கு கூட புது துணிமணி, பட்டாசுகள் வாங்க முடியாமல் தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

  இந்த சூழலில் சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.