1330 பாக்கெட் கர்நாடகா மது பறிமுதல்! ரெய்டு தொடருமா?
ஜி.கே.சேகரன்,
கர்நாடகா மாநிலத்திலிருந்து மலை கிராமம் வழியாக இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1330 மது பேக்கெட்டுகள் பறிமுதல், இரண்டு பேர் கைது.-கள்ள சாராயம் காய்ச்சுவதை நிறுத்திய சாராய வியாபாரிகள் வெளிமாநில மது பாட்டல்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மழை கிராமம் வழியாக கர்நாடகா மது பாட்டில்கள் கடத்தி வருவதாக பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அரவட்லா மலை கிராமம் வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் சுமார் 15 பெட்டிகளை கொண்டு வந்த 2 நபர்களை நிறுத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பாக்ஸ்களை சோதனை செய்ததில் அதில் கர்நாடகா மது பேக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் பேரணாம்பட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பேர்ணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த புவியரசன் மற்றும் பேரணாம்பட்டு ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த பூவரசன் என்பது தெரியவந்தது. கள்ள சாராயம் விற்பனை நிறுத்தியதை தொடர்ந்து தற்போது வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த சுமார் 1330 கர்நாடகா மது பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து கவியரசன் மற்றும் பூவரசன் இருவரையும் பேரணாம்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தீபாவளி சீசனுக்கான கண்துடைப்பு ரைடுங்க பிரதர். இன்னும் முக்கிய கடத்தல் புள்ளிகள் உள்ளனர். அவர்களையும் பிடிக்க ரெய்டு தொடருமா என்பதை சொல்லச் சொல்லுங்களேன் என்கிறார்கள் பொதுமக்கள்.

admin
