கலெக்டர் மேடம் வெளிநாட்டு பப்பாளி விதைகளை கொடுங்கள்! விவசாயிகள் கோரிக்கை!
கு.அசோக்,
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் அயல் நாடுகளிலிருந்து பப்பாளி விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வேலூர்மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமிதலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டமானது நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் மழை காலம் ஆற்றில் ஏற்படும் நீர் கடலில் சென்று கலக்காமல் இருக்க

ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
நீர் நிலைகளை தூர்வார வேண்டும் ஏரி கரைகளை பலப்படுத்த வேண்டும் மேலும் அயல் நாட்டிலிருந்து சில விவசாயிகள் பப்பாளி விதைகளை வாங்கி பயிர் செய்து நல்ல மகசூல் கிடைத்து லாபம் அடைந்துள்ளனர்.
ஆகவே பப்பாளி விதைகளை இறக்குமதி செய்து விவசாயிகள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

admin
