நிஜமாகவே ரயிலை மறித்த வாணியம்பாடி பொதுமக்கள்! அடுத்த தேர்தலுக்கும் இதே வாக்குறுதிங்களா எம்பி சார்!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் முடி இருந்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் நுழைந்து தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் இருந்து நியூடவுன், நேதாஜி நகர், ஜீவாநகர், இந்திரா நகர், உள்ளிட்ட நகர்கல், ஆலங்காயம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல நியூடவுன் ரயில்வே கேட் தான் வழியாக உள்ளது.
இவ்வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில்வே கேட் வழியாக நாளொன்றிற்கு 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு கால விரயம் ஏற்படுகின்றது.
ஆகவே அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். சில சமயங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இதுவரையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில் இன்று ரயில்வே கேட் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன, ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

எனவே ரயில்வே கேட்டில் நுழைந்து திருப்பதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எஸ்.வி.எம்.டி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்த ஈடுபட்டு உடனடியாக ரயில்வே கேட் திறக்க வழிவகை செய்தனர்.
ரயில்வே பாதையில் நான்குக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் லுப் லைனில் 15 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற வேலூர் எம்பி கதிர் ஆனந்த் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதாக சொல்லிதான் வாக்குகளைப் பெற்றார். ஆனால் வென்ற பின்னர் அந்த பக்கமே அவர் வரவில்லை. ஒரு வேளை அடுத்த தேதலுக்கும் இதே வாக்குறுதியை அளிக்க முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ?

admin
