சென்னை கல்லூரி மாணவர்களை குறிவைத்து விபச்சாரம்! வேலூரிலும் ஆட்டம்!!
ம.பா.கெஜராஜ்,
சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
அதில் பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய தெரிவித்திருந்தார்.
அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில்தான் 53 வயதில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும் அதன் பின் நெற்குன்றத்தில் விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது.
அந்த வகையில் சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவிலுள்ள அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள் பல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் பறந்து வருகின்றன.
எனவே, நெற்குன்றம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வீட்டிற்கு மட்டும் அடிக்கடி இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலியல் புரோக்கர் ராஜா என்பவர், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜாவை சுற்றி வளைத்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது, நெற்குன்றம் பகுதியை சுற்றி அதிகளவில் என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளதால், அந்த பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்து வந்ததாகும், என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே, இந்த பாலியல் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்காகவே தனியாக வாட்ஸ் அப் குரூப் அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் புரோக்கர் ராஜாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 இளம் பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாலியலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வேலூரில் வடக்கு மற்றும் காட்பாடி காவல் நிலையங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியிலும் மாணவர்களுக்காக இந்த தொழில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

admin
