அரிசி அட்டைக்கு மட்டும் பொங்கல் பரிசு!  சர்க்கரை அட்டைக்கு இல்லையா?

அரிசி அட்டைக்கு மட்டும் பொங்கல் பரிசு!  சர்க்கரை அட்டைக்கு இல்லையா?

ம.பா.கெஜராஜ், 

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசு சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இல்லை.

  இந்நிலையில் ஏழ்மையில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் சர்க்கரை அட்டை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்குரிமைகளும் உள்ளது.

 ஆனால் மாத சம்பளம் பெறும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் அரிசி அட்டை வைத்துக் கொண்டு ஏழைகளின் பயன்களை அனுபவித்து வருகிறார்கள்.

காரில் வந்து ஒரு துண்டு கரும்பை இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.

இதை அரசு மனதில் கொள்ள வேண்டும் என்று நிஜ பயனாளிகள் கோருகின்றனர்.

  அரசின் இந்த அறிவிப்பின் மூலம், 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். வேட்டி-சேலைகள் எல்லாமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  இன்று முதல் டோக்கன்: பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி-சேலை மற்றும் ரொக்கப் பணம் வழங்குவதற்கான டோக்கனை நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர்.