ஊராட்சி பெண் தலைவரின் கணவர் அடாவடி! வசைபாடிய மக்கள்!

ஊராட்சி பெண் தலைவரின் கணவர் அடாவடி! வசைபாடிய மக்கள்!

ஜி.குலசேகரன்,

வாணியம்பாடி அருகே ரயில்வே பாலத்தின் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சாலையை அடைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வந்த ஆட்டோ செல்ல முடியாமல் பெண்கள் கடும் அவதி.

 ஜேசிபி ஓட்டுநர் பொதுமக்களை அநாகரிகமாக பேசியதால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சிகுட்பட்ட  புருஷோத்தமகுப்பம் பகுதியில் ரயில்வே  பாலத்திற்கு அடியில் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மலையடிவாரம் வரை செல்கிறது.

 சுமார் 100 வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

  அந்த பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் அவருடைய செங்கல் சூளைக்காக தொடர்ந்து அனுமதியின்றி ஜேசிபி எந்திரம் மூலம் மண்  அள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் காழ்புணர்சி காரணமாக பொதுமக்களை பழிவாங்கும் நோக்கில் திமுக பிரமுகர் முருகன்   இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தக் முடியாதவாறு சாலையின் குறுக்கே பெரிய பெரிய கற்களையும் மண்ணையும் கொட்டி அடைத்துள்ளார்.

  இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல்  மிகவும் அவதிப்பட்டனர்.

  குறிப்பாக மருத்துவனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

 அப்போது பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநர் மோகன் மற்றும் திமுக பிரமுகர் முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அதன் பின்னர் ஜேசிபி எந்திரம் வரவழைத்து அந்த சாலையில் கொட்டி வைத்திருந்த கற்களை அப்புறப்படுத்த வந்த ஜேசிபி ஓட்டுநர் பொதுமக்களை அநாகரிகமாக பேசினார்.

 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜேசிபியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 இதனைத் தொடர்ந்து சாலையில் கொட்டிய கற்கள் மற்றும் மண்ணை பொதுமக்கள் உதவியுடன் சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.இதனால் அந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இது குறித்து ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர் குணசேகரன் கூறிய போது, திமுக ஊராட்சி மன்ற தலைவர் பரிமளாவின் கணவர் முருகன் அவர் செய்யும் செயல்கள் குறித்து தட்டி கேட்டால் ஆத்திரம் அடைந்து இவ்வ்று இடையுறு செய்து வருகிறார். அவருக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை  என்பதால் அவர் இது போன்று செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.