பாதியில் படிப்பை நிறுத்தி2242 மாணவர்களில் 63 பேரை மட்டுமே கண்டுபிடித்த அதிகாரிகள்!

பாதியில் படிப்பை நிறுத்தி2242 மாணவர்களில் 63 பேரை மட்டுமே கண்டுபிடித்த அதிகாரிகள்!

 கு.அசோக்

 காட்பாடியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கி அவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர்.

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் இடைநின்றவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உயர் படிப்பு வழங்க சிறப்பு முகாமானது நடத்தப்பட்டது.

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமையில் நடந்த இந்த முகாமில், திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அவர்களுக்கு உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

 இம்மாவட்டத்தில் 2242 மாணவ,மாணவிகள் உயர் கல்விக்கு செல்லாமல் இடை நின்றுள்ளனர். இதில் 63 மாணவர்கள் மட்டுமே கண்டறியப்பட்டு அவர்களை இன்று கல்வி பெற கல்லூரிகளில் சேர்க்கப்பட்டது. இமாவட்டத்தில் மீதமுள்ள இடைநின்ற மாணவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளது.

 இதில் 2179 மாணவர்கள் இடைநின்றவர்கள் உயர் கல்விக்கு செல்லாமல் உள்ளனர். அவர்களில் 800 பேர் எங்குள்ளனர் என கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

 இதே போல் முகாமானது குடியாத்தத்திலும் நடைபெற்றது, காட்பாடியில் நடைபெற்ற முகாமில் அனைக்கட்டு,வேலூர்,காட்பாடி,கணியம்பாடி,வேலூர் மாநகரம் மற்றும் கிராம பகுதி மாணவர்கள் சேர்க்கையும் குடியாத்தத்தில் கேவிகுப்பம் பேர்ணாம்பட்டு குடியாத்தம் ஆகிய வட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் இம்முகாமானது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.