வட மாநில கொள்ளையர்கள் கைது!

வட மாநில கொள்ளையர்கள் கைது!

கு.அசோக்,

 பேருந்து நிலையங்களில் தொடர் கொள்ளையில்ஈடுபட்டு வந்த வட மாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

  வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் செல்போன் மற்றும் பணம் ஆகியவைகளை பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

  ஒடிசா மாநிலம் காகிதப்பள்ளி சாயி தஞ்சம்மாவட்டத்தை சேர்ந்த தாஸ் புளு, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த குக்கல ராஜுஆகிய இரண்டு பேரும் திருப்பதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

   அப்பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, வேலூர் மாவட்டத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று காலை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம் செல்போனை கொள்ளை அடிக்க முயற்சித்த போது அவரிடம் செல் போன் இல்லாததால் அவர் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.

   இதனை அறிந்த அப்துல் உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொள்ளையில் ஈடுபட்ட  கொள்ளையர்களை உடனடியாக கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இரு வரையும் கைது செய்தனர்.