வேலூர் ஆர்.டி.ஓ சோதனை! அப்பாடா இப்போதாவது சோதனை செய்து அரசுக்கு லாபம் கொடுத்தீர்களே!

வேலூர் ஆர்.டி.ஓ சோதனை! அப்பாடா இப்போதாவது சோதனை செய்து அரசுக்கு லாபம் கொடுத்தீர்களே!

 கு.அசோக்,

 தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகளில் அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

 அதன் பேரில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து துறை சோதனை சாவடியில் ஆர்.டி.ஓ வாகன சோதனை செய்தார்.

 அப்போது 84 லட்சம் ரூபாய் வரியாகவும் 573 வாகனங்களுக்கு குற்றங்கள் கண்டறியப்பட்டு 14 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

   மற்றும் இதர வரிகள் சேர்த்து ஒரே மாதத்தில் ரூபாய் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் வசூலித்திருப்பதாகவும் அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கிய நான்கு பிற மாநில வாகனங்கள் கண்டறியப்பட்டு சிறைபிடிக்கப்பட்டது.

  அவை வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன மேலும் அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கிய 38 பிற மாநில ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக காட்பாடி போக்குவரத்து துறை சோதனை சாவடி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்..

   மேலும் சமீபத்தில் போக்குவரத்து ஆணையர் நடத்திய ஆய்வின்போது அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களையும் அரசு வரி செலுத்தாமல் இயங்கும் வாகனங்களையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்த பேரில் இந்த துரித நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக ஆய்வாளர் தெரிவித்தார்..

நல்லா தெரிவித்தார்.