மாமியாருக்கு தர்ம அடி!மருமகள் இறப்பால் தகறாறு!
ஜி.கே.சேகரன்,
இரண்டு பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு,இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சடலத்தை வைத்து போராட்டம்.பெண்ணின் மாமியரை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு.
திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவருக்கு சுதா என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,சுதா மற்றும் அவரது கணவரிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சுதாவிற்கு இரண்டும் பெண் குழந்தையும் பிறந்ததால், அவரது மாமியார் ருக்குமணி சுதாவிடம் அடிக்கடி சண்டையிட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் சுதா வீட்டில் தூக்கிட்டு, இறந்துவிட்டதாக சுதாவின் கணவர், குடியாத்தம் மீனூர் பகுதியில் உள்ள சுதாவின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த சுதாவின் உறவினர்கள், குடும்ப தகராறு காரணமாக சுஜாதாவை அவரது கணவர், மற்றும் மாமியர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகவதாக வாக்குவாதம் செய்தனர்.
சுதாவின் உறவினர்கள், அவரது சடலத்தை எடுக்கவிடாமல், போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
அதனை தொடர்ந்து மாமியார் ருக்குமணியை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச்சென்ற போது, சுதாவின் உறவினர்கள் ருக்குமணியை சரமாரியாக தாக்கியனர், உடனடியாக ருக்குமணியை ஆட்டோ மூலம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.அதனை தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
மேலும் திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றார்.

admin
